
posted 30th November 2022
இலண்டன், நகரில் சவுத்கோள் என்ற பகுதியில் நேற்றைய தினம் (29) தனது காரில் வழமைபோல சவாரி செய்த ஒரு குடும்பத்தவரின் காரானது திடீரென நடுரோட்டிலே குடை சாய்ந்தது.
அதிஷ்ட வசமாக அவ்வழியால் அச்சமயம் வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்ததனால் கார் தலைகீழாகக் கவிண்டதினால் ஏற்பட்ட சேதங்களைத் தவிர அதிக சேதங்கள் ஏற்படவில்லை.
சாரதி காரினுள்ளே அகப்பட்ட நிலையில் வீதி வழியாகப் போனவர்கள் எடுத்த நடவடிக்கை காரணமாக பாரிய பாதிப்பின்றி சாரதி மீட்கப்பட்டார்.
கார் குடைசாய்ந்த காரணம் இன்று (30) வரை தெரியவில்லை.