கிழக்கில் அண்ணாவிமார் மாநாடு

கிழக்கு மாகாணத்தில், வரலாற்று முக்கியத்வதும் பெற்ற வடமோடி, தென்மோடி கூத்துக் கலைக்கு புத்தூக்கமளிக்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவிருக்கின்றது.

இந்த பண்பாட்டு கூத்துக்கலை அருகிப் போய்விடாது பாதுகாக்கும் நோக்குடனும், இக்கலையை வளர்த்துவரும் அண்ணாவிமார் தொடர்பான வரலாற்றுப் பதிவை ஆவணப்படுத்தவும் இதன் மூலம் ஆவன செய்யப்படவிருக்கின்றது.

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளராகப் பதவியேற்றதிலிருந்து பல முன்னோடித் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்திவரும் மாகாண பணிப்பாளர் திருமதி. சரண்யாசுதர்சனின் எண்ணக்கருவிற்கு அமைவாக இந்த கூத்துக்கலை புத்தூக்கதிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய நிகழ்வாக எதிர்வரும் டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் கிழக்கு மாகாணம் தழுவிய அண்ணாவிமார் மாநாடொன்றை நடத்துவதற்கான ஏற்பாடு பணிப்பாளர் சரண்யா சுதர்சனின் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அருகிவரும் கூத்துக் கலைக்கு புத்தூக்கமளிக்கவும், இக்கலை தொடர்பில் எதிர்கால இளம் சந்ததியினருக்கு விழிப்பூட்டவும், இக்கலையை உயிரோட்டத்துடன் மிளிரச் செய்துவரும் அண்ணாவிமாரின் வரலாற்றுப் பதிவை ஆவணப்படுத்தவும் இந்த மாநாட்டின் மூலம் வழிவகுக்கப்படவிருக்கின்றது.

மாநாட்டையொட்டி “தெய்” எனும் பெயரில் விசேட மலர் ஒன்று வெளியிடப்படவிருப்பதுடன், கிழக்கிலுள்ள அண்ணாவிமார்களது விபரங்கள், வரலாறுகள் கொண்ட ஆவணமாகவும் இந்த மலர் அமையவிருப்பதாகவும் ஏற்பாட்டுக் குழு முககியஸ்த்தரும், மாவட்ட கலாச்சார இணைப்பாளருமான த. மலர்ச் செல்வன் தெரிவித்தார்.

மேலும் அண்ணாவிமாரின் ஒன்று கூடலான இந்த மாநாட்டில் கலைக்கூத்தர் விருது, மாண்புறுவிருது, இளம் அண்ணாவிமார் விருது ஆகிய விருதுகள் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்டு அண்ணாவிமார் கௌரவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பணிப்பாளர் சரண்யா சுதர்சனின் ஆக்கபூர்மான ஆலோசனைகளுடன் முக்கியத்துமிக்க நிகழ்வாக மேற்படி அண்ணாவிமார் மாநாடு நடைபெறவிருப்பதாகவும், ஏற்கனவே கடந்த 1968 ஆம் ஆண்டு இத்தகைய முதலாவது அண்ணாவிமார் மாநாடு கிழக்கில் இடம்பெற்றதுடன், தமது முயற்சியில் 2012 இல் இரண்டாவது மாநாடு நடைபெற்றதாகவும், மலர்ச் செல்வன் கூறினார்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த அண்ணாவிமாரின் விபரங்கள் தற்பொழுது திரட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் அண்ணாவிமார் மாநாடு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY