கரபந்தாட்டப் போட்டியில் துள்ளுக்குடியிருப்பு கழகம் வெற்றியீட்டியுள்ளது

மன்னார் பகுதியில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை கரபந்தாட்ட விளையாட்டில் ஊக்குவிக்கும் முகமாக ஜேஎஸ்ஏஈ நிறுவனமானது யுனிசெவ் நிறுவனத்தின் அனுசரனையுடன் கரபந்தாட்ட சுற்றுப் போட்டிகளை கடந்த ஓரிரு தினங்களாக முன்னெடுத்தது.

சிறுவர் கழகங்களுக்கிடையிலான இவ் போட்டியில் தாராபுரம் . தோட்டவெளி , துள்ளுக்குடியிருப்பு , கருங்கண்டல் , தலைமன்னார் கிராமம் , நடுக்குடா , ஓலைத்தொடுவாய் , கீழியன்குடியிருப்பு ஆகிய எட்டுக் கழங்கள் இவ் கரபந்தாட்டப் போட்டிகளில் ஈடுபட்டன.

இவ் போட்டியில் இறுதி போட்டியானது துள்ளுகுடியிருப்பு இளந்தளீர் கழகத்துக்கும் மற்றும் தாராபுரம் அல் ஜின்னா சிறுவர் கழகத்துக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை (13.11.2022) துள்ளுகுடியிருப்பு கரபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்றது.

ஐந்துக்கு மூன்று என்ற வெற்றியை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட இவ் போட்டியில் துள்ளுகுடியிருப்பு இளந்தளீர் கழகம் தாராபுரம் அல் ஜின்னா கழகத்தை 3-2 என்ற புள்ளியில் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

இவ் போட்டிக்கு மத்தியஸ்தர்களாக ரி.ஜெபநேசன் மற்றும் வீ.கோபினாத் ஆகியோர் ஈடுபட்டனர்.

இவ் போட்டியில் விருந்தினர்களாக மன்னார் யுனிசெவ் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.இருதயநாதன் யுனிசெவ் திட்டமிடல் அலுவலகர் த.அழகேஸ் , சிறுவர் நன்னனடத்தை அலுவலகர் ஓஸ்மன் குலாஸ் , மன்னார் மாவட்ட கரபந்தாட்ட சங்கத் தலைவர் ஜி.ஸ்ரீபன் அருட்சகோதரி மேரி சென். மேரிஸ் சிறுவர் பாடசாலை ஆசிரியர் சர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கரபந்தாட்டப் போட்டியில் துள்ளுக்குடியிருப்பு கழகம் வெற்றியீட்டியுள்ளது

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)