
posted 20th November 2022
உலகத்தில் இருக்கின்ற ஈழத் தமிழர்களை கவர்வதற்காக ஜனாதிபதியின் வவுனியா , மன்னார் விஜயமாக இருந்தாலும் இவ் வன்னி மாவட்டத்தில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படும் போதே அவரின் கனவு நனவாகும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில்
ஜனாதிபதி அவர்கள் 19 திகதி வவுனியாவிற்கும் 20ம் திகதி மன்னாருக்கும் வருகை தர உள்ளதாக எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா மன்னாருக்கு கண்ணாணிப்பு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி வன்னி மாவட்டத்தில் இருக்கின்ற விஷேடமான பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மிக முக்கியமாக காணி அபகரிப்பு அத்துடன் மீனவர்கள் தொழிலுக்குச் செல்வதற்கு எரிபொருள் கொள்வனவு செய்ய முடியாத நிலை மண்ணெண்ணெயினுடைய விலை தொடர்பாகவும் மீனவர் சமூகம் மிகவும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
அதைவிட விவசாயிகள் விவசாயத்திற்குத் தேவையான பசளை கிருமிநாசினிகளுடைய விலைகள் தொடர்பாக மிகவும் அதிருப்தியில் இருக்கிறார்கள். கடந்த போகத்தில் உற்பத்தி செய்த நெல்லைக் கூட பி.எம்.பி நிறுவனம் நெல்லை கொள்வனவு செய்வதற்கு பணம் இல்லாமல் நிறுத்தி இருக்கிறது. இதனால் விவசாயிகள் அதிருப்பிதியில் இருக்கிறார்கள்.
இவ்வாறு மக்கள் பல விடயங்களில் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்ற நெருக்கடியான சூழ்நிலை இருக்கின்றது. ஆகவே ஜனாதிபதியினுடைய வருகை மூலமாக நெருக்கடி நிலைகளும் பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும். அப்படி தீர்க்காவிட்டால் மக்களுக்கு ஏமாற்றமாக அமையும்.
ஜனாதிபதியின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று அவர் சிந்தித்து இருக்கலாம். உலகத்தில் இருக்கின்ற ஈழத் தமிழர்களை கவர்வதற்காக அவர் இந்த பயணத்தை எண்ணியிருக்கலாம். ஆனால் அவர் வருகையினால் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY