இந்தியாவில் இலங்கைத் தமிழர் முகாமில் இருக்கும் அனோஜனுக்கு  விஜிலென்ஸ் சேவா ரத்னா விருது
இந்தியாவில் இலங்கைத் தமிழர் முகாமில் இருக்கும் அனோஜனுக்கு  விஜிலென்ஸ் சேவா ரத்னா விருது

இந்தியாவின் முதல் ஈஸோ தரச் சான்றிதழ் பெற்றுள்ள முன்னணி அரசியல் மற்றும் புலனாய்வு வார இதழான விஜிலென்ஸ் பத்திரிகை தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனைப் படைத்தவர்களில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அகதி முகாமில் இருக்கும் இலங்கையரான டேவிட் ஜோன் அனோஜனுக்கும் விருது கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்தியாவின் முதல் ஈஸோ தரச் சான்றிதழ் பெற்றுள்ள முன்னணி அரசியல் மற்றும் புலனாய்வு வார இதழான விஜிலென்ஸ் பத்திரிகை தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியஇ சாதனைப் படைத்த 25 நபர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கான விருதுகள் கடந்த வாரம் வழங்கப்பட்டன.

இதில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கஸ்தம்பாடி இலங்கைத் தமிழர் முகாமில் வசித்து வரும் டேவிட் ஜோன் அனோஜன் என்பவருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான விஜிலென்ஸ் சேவா ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து தமிழகத்தில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசித்துவரும் தமிழ் மக்களின் நலனுக்காக ஒரு சமூக ஆர்வலராக பல்வேறு விதங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருவதை பாராட்டியும்இ புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களின் இந்திய குடியுரிமைக்காக தொடர்ந்து அரசிடமும் அரசியல் கட்சி பிரமுகர்களிடமும் வலியுறுத்தி செயல்பட்டு வருவதையும்இ பொதுநல அமைப்புகளுடன் சேர்ந்து மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு உரிய வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகளை செய்து வருவதையிட்டும்இ இலங்கைத் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியத் தமிழர்களுக்கும் பலவிதங்களில் சேவையாற்றி வருவதை பாராட்டியும் இவருக்கு இந்தாண்டுக்கான விஜிலென்ஸ் சேவா ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விருதினை தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான்இ தமிழ்நாடு பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு சா.மு.நாசர்இ தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் மா.மதிவேந்தேன்இ தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் துணை இயக்குனர் டாக்டர் இரா.சிவக்குமார் ஐபிஎஸ்இ ரெட்ஹில்ஸ் காவல் துணை ஆணையர் திரு.எம்.மணிவண்ணன் ஐபிஎஸ் ஆகியோர் கரங்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்த விருது வழங்கும் விழாவில் அரசு உயர் அதிகாரிகள்இ சினிமா பிரபலங்கள்இ சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

தமிழக மறுவாழ்வு முகாமில் வசித்துவரும் டேவிட் ஜோன் அனோஜனுக்கு அவரது சேவைகளைப் பாராட்டி தேசத்தின் அடையாளம் என பாராட்டி சமூக சேவகர் விருதும் இவ்வாண்டில் வழங்கப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இலங்கைத் தமிழர் முகாமில் இருக்கும் அனோஜனுக்கு  விஜிலென்ஸ் சேவா ரத்னா விருது

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)