
posted 29th November 2021
யாழ் மாவட்டத்தில் ஐந்து கிராமங்களில் 26/11 வெள்ளிக்கிழமை முதற்கட்டமாக நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மற்றும் பிராந்திய குடிநீர் விநியோக திட்டத்தின் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் "செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்" எனும் தொனிப்பொருளில் யாழ் மாவட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதனின் தெரிவில் முதற்கட்டமாக ஐந்து கிராமங்களில் தலா 4மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவில் இடைக்குறிச்சி கிராமத்திலும்,கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் அச்செழு கிராமத்திலும்,தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் அளவெட்டி தெற்கு மற்றும் வறுத்தலைவிளான் கிராமங்களிலும்,உடுவில் பிரதேச செயலர் பிரிவில் உடுவில் வடக்கு கிராமம் ஆகியவற்றில் பாதுகாப்பான குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.குறித்த திட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் பிரத்தியேக செயலாளரும்,கரவெட்டி பிரதேச சபை உறுப்பினருமான ச.இராமநாதன் ஆரம்பித்து வைத்திருந்தார்.

எஸ் தில்லைநாதன்