
posted 24th November 2021
கொடிகாமம் பிரதேசத்தின் வேம்பிராய் பகுதியில் பெருமளவு வெடிபொருட்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
வேம்பிராயில் தனியார் காணி ஒன்றை துப்பரவு செய்தபோது வெடிபொருட்களை அவதானித்த காணி உரிமையாளர் பொலிஸார் ஊடாக இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து அங்கு சென்ற சிறப்பு அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் இணைந்து குறித்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்