
posted 1st November 2021
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் ஏ - 09 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் ஒருவரான முதியவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளும் மிதிவண்டியுமே விபத்தில் சிக்கின எனத் தெரியவருகிறது.
சம்பவத்தில் படுகாயம் அடைந்த செல்லையா சற்குணநாதன் (வயது 78), கிருஸ்ணகுமார் சுகிந்தன் (வயது 27) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எஸ் தில்லைநாதன்