
posted 14th November 2021
யாழ். அராலி, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வாளுடன் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்