வவுனியாவில் சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி (04.11.2021)

வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 16 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில வெளியாகியுள்ளன.

அதில், நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 வயதுடைய இரு சிறுவர்களுக்கும், பரசங்குளம் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவருக்கும், கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது சிறுவன் ஒருவருக்கும் என 4 சிறுவர்கள் உட்பட 16 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தொற்றாளர்களைச் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவில் சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி (04.11.2021)

எஸ் தில்லைநாதன்