
posted 15th November 2021
வவுனியாவில் 17 மாணவர்கள் உட்பட மேலும் 47 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டோர், தாமாக முன்வந்து பரிசோதனை செய்தோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகளின் ஒரு தொகுதி நேற்று இரவு 9 வெளியாகின.
அதில் வவுனியாவில் 17 மாணவர்கள் உட்பட 47 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மறவன்குளம், தோணிக்கல், பூந்தோட்டம், சிறிராமபுரம், சிதம்பரபுரம், வன்னிக் கோட்டம், பூவரசன்குளம், அம்பலாங்கொடவல உள்ளிட்ட பகுதிகளிலேயே மாணவர்கள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒரு வயது, இரண்டரை வயது, 5 வயது குழந்தைகளும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொற்றாளர்களைச் சிகிச்சைக்காகத் தனிமைப்படுத்தவும், அவர்களுடன் தொடர்புடையவர்களைச் சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, வவுனியாவில் மீண்டும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்