
posted 26th November 2021
உயிரிழந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட வயோதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குச்சம் ஒழுங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செங்கல் வரதராசா சக்திவேல் (வயது- 76) என்பவர் நேற்று முன்தினம் புதன்கிழமை(24) வீட்டில் வழுக்கி விழுந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
வைத்திய சலையில் மேற்கொள்ளப்பட்ட டீ.சீ.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை(25) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
அதேவேளை,
பருத்தித்துறை, முதலாம் கட்டைச் சந்திப் பகுதியில் மரக்காலையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சண்முகராஜா துஷ்யந்தன் (வயது 21) என்ற இளைஞருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன்