வறிய மக்களுக்கு உதவுங்கள். பரலோகத்தில் உங்களுக்கு சொத்து சேர்க்கப்படும் - அருட்தந்தை எஸ்.டிக்சன் அடிகளார்
வறிய மக்களுக்கு உதவுங்கள். பரலோகத்தில் உங்களுக்கு சொத்து சேர்க்கப்படும் - அருட்தந்தை எஸ்.டிக்சன் அடிகளார்

சொத்துக்கள் சேகரிப்பதில் கவனம் செலுத்தாது துன்பங்கள் சூழ்ந்துள்ள இக் காலக்கட்டத்தில் நாம் வறிய மக்கள் மீது கருணை கொண்டவர்களாக இருக்க வேண்டும் இதையே பரிசுத்த திருத்தந்தை இந்நாளில் வேண்டி நிற்கின்றார் என பேசாலை உதவி பங்கு தந்தை அருட்பணி எஸ்.டிக்சன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

கத்தோலிக்க பரிசுத்த பாப்பரசர் இன்றைய நாளை (14.11.2021 - ஞாயிற்றுக்கிழமை) வறிய மக்களின் நாளாக பிரகடணப்படுத்திய ஐந்தாவது ஆண்டு நினைவுகூறப்பட்டது.

இன்றைய இந்நாளில் பேசாலை உதவி பங்கு தந்தை அருட்பணி எஸ்.டிக்ஷன் அடிகளார் பேசாலை பங்கின் நூறு வீட்டுத்திட்டத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்த வேளையில் தனது மறையுரையில் மேலும் தெரிவிக்கையில்;

கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை இன்றைய நாளை (14.11.2021) அதாவது ஞாயிற்றுக் கிழமை ஆகிய இந் நாளில் ஏழை எழியவர்களுக்கான தினமாக பிரகடணப்படுத்திய ஐந்தாவது வருடத்தை நினைவு கூறுகின்றோம்.

நாம் இறை விசுவாசத்திலும், மகிழ்ச்சியிலும் திழைக்க வேண்டுமானால் சொத்துக்கள் சேர்ப்பதில் நாம் கவனம் செலுத்தாது பகிர்ந்து வாழும் மக்களாக நாம் எம்மை ஆழப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மற்றவர்களுக்கு உதவிகள் புரிகின்றபோது இறை சாயலாக படைக்கப்பட்ட நாம் இறை வழியில் செல்லும் மக்களாக எம்மை நாம் ஆக்கிக் கொள்வோம்.

இப்பொழுது பல்வேறுபட்ட தன்மையில் மக்கள் பாதிப்படைந்து வரும் நிலையை நாம் காண்கின்றோம். கொரோனா தொற்று நோய் ஒருபுறம், இயக்கை அனர்த்ங்கள் மறுபுறம்.

இந்த நிலையில் திருத்தந்தையின் எண்ணக் கருவுக்கேற்ப ஏழை எளிய மக்கள் துன்பறும் இவ்வேளையில் நாம் இவர்களுக்கு அன்பு காட்டி உதவிகள் பல புரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்வாறான செயல்பாட்டில் நாம் செயல்படும் போது இறை இயேசுவின் வருகைக்காக ஆய்த்தப்படுத்தும் இவ்வேளையில் மகிழச்சியுடன் அவரை வரவேற்பதற்கான நாளாக அமையும் என இவ்வாறு தெரிவித்தார்.

வறிய மக்களுக்கு உதவுங்கள். பரலோகத்தில் உங்களுக்கு சொத்து சேர்க்கப்படும் - அருட்தந்தை எஸ்.டிக்சன் அடிகளார்

வாஸ் கூஞ்ஞ