
posted 29th November 2021
நிந்தவூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் (பாதீடு) நாளை (30) செவ்வாய்க்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படவிருக்கின்றது.
நாளை நடைபெறும் சபை மாதாந்த அமர்வில் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் குறித்த வரவு செலவு திட்ட பொலிவை சபையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நிந்தவூர் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
நாளை சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் சபையில் விவாதம் இடம்பெற்று வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்படும் எனத்தெரியவருகின்றது.

ஏ.எல்.எம்.சலீம்)