
posted 10th November 2021
வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளின் செயல்பாடுகளும் வியாழக்கிழமை (11.11.2021) தொடக்கம் வழமைபோல நடைபெறும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தொடர் மழையால் நேற்று யாழ். மாவட்டப் பாடசாலைகளுக்கும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கும் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே வியாழக்கிழமை (11.11.2021) தொடக்கம் அனைத்துப் பாடசாலைகளின் செயல்பாடுகளும் வழமைபோல நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எஸ் தில்லைநாதன்