ரிஷாட் வருகிறார்
ரிஷாட் வருகிறார்

கில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்

ஆறுமாதகால அநியாய சிறைப்படுத்தலுக்குட்பட்டிருந்த, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.

கட்சி ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்கள், பொது மக்களைச் சந்திப்பதற்கென மாவட்டங்கள் தோறும் சென்றுவரும் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வருகைக்கான அழைப்பை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழு விடுத்திருந்தது.

இதனையேற்று வருகை தரவிருக்கும் தலைவர் ரிஷாட், அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு முஸ்லிம் பிரதேசங்களிலும் இடம் பெறும் மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொள்ளவுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிந்தவூர், நாவிதன் வெளி, நற்பிட்டிமுனை, பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை ஆகிய பிரதேசங்களுக்கும் 20 ஆம் திகதி சனிக்கிழமை இறக்காமம், மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, சம்மாந்துறை, மருதமுனை, கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கும் தலைவர் ரிஷாட் வருகை தரவுள்ளார்.

தலைவர் ரிஷாட் பதியுதீனை நேரில் சந்திப்பதற்கும், அவரைக் காண்பதற்கும் இம்மாவட்ட மக்கள் பெரும் எதிர்பார்ப்பும், ஆர்வமும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரிஷாட் வருகிறார்

ஏ.எல்.எம்.சலீம்