
posted 2nd November 2021
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகமும், பனை அபிவிருத்தி சபையும் இணைந்து மேற்கொள்ளவுள்ள ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பலான பூர்வாங்க சந்திப்பு நேற்று பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
பனை அபிவிருத்தி சபையால் முன்மொழியப்பட்டுள்ள ஆய்வு நடவடிக்கைகளில் இரு தரப்பனதும் பங்கு பற்றி நேற்றைய சந்திப்பின் போது விரிவாக ஆராயப்பட்டது.
பனை அபிவிருத்தி சபையின் சார்பில் அதன் தலைவர் கிரிசாந்த பத்திராஜா, அதன் பணிப்பாளர் சபை உறுப்பினரும், பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகருமான பேராசிரியர் சு. மோகன்தாஸ், பனை அபிவிருத்தி சபையின் பிரதிப் பொது முகாமையாளரும், பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் தர நிர்ணய முகாமையாளருமான எஸ். விஜேந்திரன் ஆகியோர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

எஸ் தில்லைநாதன்