யாழ் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரிவிவகாரம் முடிவுக்கு வந்தது

யாழ்ப்பாணம், இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியை ஆதரவற்றவர்களை பராமரிக்கும் இல்லம் அல்லது பொது நிறுவனங்களுக்கு வழங்க வலியுறுத்தி அதன் உரிமையாளர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். தனது குடும்பத்தினரை வலியுறுத்தியே கல்லூரி முன்பாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி சார்பில் பணம் கடனாக பெறப்பட்டுள்ளதாகவும், அந்த பணத்தை திருப்பிச் செலுத்திவிட்டு, கலைக்கல்லூரியை பொது நிறுவனங்களுக்கு வழங்கவேண்டுமென வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

கலைக்கல்லூரியை விற்கவோ, வழங்கவோ மனைவி கையொப்பமிட மறுக்கிறார் என போராட்டத்தில் ஈடுபட்ட உரிமையாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சம்பவ இடத்துக்கு சென்று, சமரசம் செய்து போராட்டத்தை முடித்து வைத்துள்ளார்.

யாழ் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரிவிவகாரம் முடிவுக்கு வந்தது

எஸ் தில்லைநாதன்