
posted 7th November 2021

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனுக்கும் யாழ் மாவட்ட 51வது பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவுக்கும் இடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்,யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த சந்திப்பில் பொதுவான பலவிடயங்கள் கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினரால் மக்களின் முன்னேற்றம் கருதி பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அச்செயற்பாடுகளுக்காக மாவட்ட அரசாங்க அதிபர் தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
மேலும் மக்களின் முன்னேற்றம் கருதி அபிவிருத்திக்காக தங்களால் ஆன முழுமையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்க தாம் தயாராக இருப்பதாக 51வது பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்