
posted 29th November 2021
யாழ்.மாவட்டத்தில் 02 நாட்களில் மூன்றாவது சடலம் சற்று முன்னர் கரையொதுங்கியுள்ளதாக பிராந்தியங்களில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பருத்தித்துறை மணற்காட்டில் நேற்றுக் சனிிக்கிழமை காலையும், வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் நேற்று மாலையும் உருக்குலைந்த நிலையில் சடலங்கள் கரையொதுங்கியிருந்தன.
அதேபோல,
தற்போது நெடுந்தீவுப் பகுதியில் பனங்காணிமுனை, ஒற்றைப் பனையடி என்ற பகுதியில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
குறித்த மீனவர்கள் ஒரே சம்பவத்தில் உயிரிழந்தவர்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அவர்களை அடையாளப்படுத்தக்கூடியதாக ஆடை அணிகள் எவையும் சடலத்துடன் இல்லை என்று தெரியவந்துள்ளது.

எஸ் தில்லைநாதன்