
posted 23rd November 2021
புலோலி மந்திகை சாரையடிப் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (21) இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் அல்வாய் அத்தாயைச் சேர்ந்த கண்ணன் காந்தன் 22 வயது என்பவரே உயிரிழந்தவராவர்.
பருத்தித்துறை பிரதான வீதியில், மந்திகை பக்கத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் பருத்தித்துறைப் பக்கத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் நேர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் மூவர் படுகாயம் அடைந்தனர் அடைந்தனர். மூவரும் பருத்திததுறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது இவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இவரது மரணம் தொடர்பாகவும் சம்பவம் தொடர்பாகவும் பருத்தித்துறைப் பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.
படுகாயங்களுக்கு உள்ளான ஏனைய இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்