
posted 27th November 2021
வவுனியா, இராசேந்திரங்குளம் குளத்தில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளார்.
இன்று வெெள்ளிக்கிழமை காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதுடன், அவ்வப்போது இடி மின்னல் தாக்கமும் ஏற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இராசேந்திரங்குளம் குளப்பகுதியில் இளைஞர் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். இதன்போது அந்தப் பகுதியில் மின்னல் தாக்கியதில் 30 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

எஸ் தில்லைநாதன்