
posted 26th November 2021
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு - மன்னாகண்டல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து மீன்பிடிப்பதற்காகப் புறப்பட்ட குறித்த நபர், மீள வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், அவரைத் தேடி நேற்று அதிகாலை 2 மணியளவில் உறவினர்கள் சென்றபோது, காட்டுப்பகுதியில் யானை தாக்கி அவர் இறந்து கிடந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கெருடமடு மன்னாகண்டலைச் சேர்ந்த 65 வயதுடைய அழகன் கோபால்ராஜ் என்பவராவர்.

எஸ் தில்லைநாதன்