மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

கொரொனா தொற்றுக் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்படடிருந்த இலங்கையின் வட பகுதிக்கன ரயில் சேவைகள் நாளை வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன

இதனடிப்படையில் காங்கேசன்துறை-கல்கிஸை இடையிலான காலை நேர ரயில் சேவைக்கான ஆசன முற்பதிவுகள் இன்று புதன்கிழமை
முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் ரயில் நிலைய பிரதம அதிபர் ரி.பிரதீபன் அறிவித்துள்ளார்.

காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 5.30 மணிக்கும் யாழ்ப்பாணம் முதன்மை ரயில் நிலையத்திலிருந்து 6.10 மணிக்கும் சேவையை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட கல்கிஸை வரையானரயில் சேவை நாளை முதல் சேவையை மீள ஆரம்பிக்கவுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு – யாழ்ப்பாணம் இடையே குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு ஆசனப் பதிவுக் கட்டணமாக ஆயிரத்து 400 ரூபாவும் இரண்டாம் வகுப்புக் கட்டணமாக 800 ரூபாவும் அறவிடப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முற்பதிவு இன்றி சாதாரண வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு 350 கட்டணம் அறிவிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

எஸ் தில்லைநாதன்