மாவீரர் நாள் நிலைவேந்தல்51 பேருக்கு தடை உத்தரவு

மாவீரர் நாள் நிலைவேந்தல் நிகழ்வை கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்க 51 பேருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மாவீரர்களை நினைவுகூரும் வாரம் நாளை ஆரம்பமாகிறது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இந்த மாவட்டத்திலுள்ள கனகபுரம், விசுவமடு, முழங்காவில் துயிலும் இல்லங்களில் உணர்வுரீதியாக மாவீரர்நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை மாவட்டத்தின் சகல பொலிஸ் நிலையங்களாலும் 51 பேருக்கு தடை உத்தரவுகள் பெறப்பட்டன.

சுண்ணாகம்

மாவீரர் நினைவேந்தலை மேற்கொள்ள தடை விதிக்குமாறு சுன்னாகம் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கின் பிரதிவாதிகள் மூவரை மன்றில் முன்னிலையாகுமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன், சுன்னாகம் பிரதேசசபை உறுப்பினர்களான சுரேஷ்குமார், சிவகுமார் லகிந்தன் ஆகியோரையே எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

மாவீரர் நாள் நிலைவேந்தல்51 பேருக்கு தடை உத்தரவு

எஸ் தில்லைநாதன்