
posted 27th November 2021
மாவீரர் தினமாகிய இன்றைய தினம்பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவே ராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு ராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை கையளிக்கும் நிகழ்வில் ஊடகவியலாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக காணப்படுகின்றது ஏன் என வினவியதற்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்றைய மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ் நகரில் ராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக காணப்படுகின்றது. எனினும் நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது ராணுவத்தின் கடமையாகும். அதனை இராணுவத்தில் தாக்கிய நாங்கள் மேற்கொண்டுள்ளோம். எந்த சூழ்நிலையிலும் நாட்டினுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு ராணுவத்தினர் ஆகிய நாங்கள் முன்னின்று செயற்படுவோம்.
அதனடிப்படையில் தற்போது பொலீசாருக்கு உதவும் முகமாகவே ராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளார்கள். அத்தோடு சட்டம் ஒழுங்கினை பொலிசார் நிலைநிறுத்துவதற்கு செயற்படுகிறார்கள்.
அவர்களுக்கு ராணுவத்தினரின் ஒத்துழைப்பு தேவைப்படுமிடத்து ராணுவத்தினரும் களமிறக்க படுவார்கள் என தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன்
விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்
Home Page - நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை
Appartments - அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments
Resorts - றிசோட்ஸ் வேண்டுமா? Resorts
Villas - விலாஸ் வேண்டுமா? Villas
B & B - B & B வேண்டுமா? B&B
Guest Houses - கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House