
posted 9th November 2021
மன்னார் பகுதியில் உள்ளுர் உற்பத்திகளாக விளங்கும் பெறுமதி சேர் உணவுப் பொருட்களை இப் பகுதி வாழ் மக்கள் இலகுவாக பெற்றுக் கொள்ளும் நோக்குடன் மாந்தை மேற்கு மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இதற்கான விற்பனை நிலையம் செவ்வாய் கிழமை (09.11.2021) அடம்பன் பகுதியில் (பிரதேச செயலகத்துக்கு முன்பாக) காலை 10 மணிக்கு திறக்கப்படுகின்றது.
நோர்வே நாட்டில் வசிக்கும் நேதாஜி அவர்களின் நிதி பங்களிப்பில் இந் நிலையம் திறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்துடன் இதே இடத்தில் படர்கொடி சேவை நிலையமும், அதாவது தட்டச்சு, அச்செடுத்தல், அச்சுப்பிரதி, இணைய வசதி மற்றும் திருமண சேவை ஆகிய சேவைகளுக்கான நிலையமே திறக்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ