மருத்துவமனை கட்டிலிலிருந்து மனோ கணேசன்
மருத்துவமனை கட்டிலிலிருந்து மனோ கணேசன்

மனோ கணேசன்

கனடா TNA கூட்ட நிகழ்வுகள், ஒன்றும் திடீர் துன்ப அதிர்ச்சிகள் அல்ல.

ஈழ அரசியலின் கடைநிலை கட்சி அங்கத்தவரும் புரிந்துக் கொள்ள கூடிய அற்ப கலாப அரசியல் சம்பவங்கள்.

நண்பர் சுமந்திரனை அழைத்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள், என்ன அரசியல் முன்பள்ளி மாணவர்களா?

இப்படி ஒரு குழுவினர் Toronto குளிரில் வந்து குழப்ப முயலுவர் என இவர்களுக்கு ஊகிக்க முடியலையா?

ஆகவே அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்திருக்க தோணலையா?

அல்லது invitees only என்ற closed door discussion ஒன்றை நடத்தி இருக்க முடியாதா?

வேண்டுமானால் வெளியே வந்து நின்று கூச்சல் எழுப்பி இருப்பார்கள்.

உண்மை சொல்லப்போனல், இப்போது இலங்கை தமிழ் அரசியலர்கள் எவரும், உலக பந்து வரைபடத்தில் தமிழர் வாழும் இடமெல்லாம்
போய் "விளக்க உரை கூட்டங்கள்" நடத்தும் காலமெல்லாம் எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டன.

இதற்கென புதிய அவசியங்கள் எதுவும் இன்று கிடையாது. இதுவும் இவர்களுக்கு புரியவில்லையா?

முதலில், இப்போ IT Media Technology அசாத்திய வளர்ச்சி அடைந்து விட்டது.

இதை நாம் புரிந்துக் கொண்டு update ஆக வேண்டும்.

அடுத்து, ஊடகங்கள் மூலம் நமது கருத்துகளை அறிவித்து, நம்ம ஊடகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுவது ஒருபுறம் இருக்க, "புலம் பெயர்ந்த மக்களுக்கு", சொல்ல வேண்டியவற்றை, நம்ம ஊரில், வீட்டில், படுக்கையறையில், அலுவலகத்தில் இருந்தபடியே, சொல்லி, நேரடியாகவே அவர்களுடன் கலந்து உரையாடலாம். விவாதிக்கலாம். சண்டை கூட இடலாம். வரம்பு மீறினால், நடத்துனர் வெட்டி நிறுத்தி விடுவார்.

அந்த அளவுக்கு IT Media Technology வளர்ந்து விட்டதே.

Grow-Up..! நீங்கள் விளக்க உரை கலந்துரையாடல்கள் நடத்த வேண்டியது, உள்நாட்டில், தாய்நாட்டில் ஆகும்.

உள்நாட்டில் நாம் எல்லோரும் பொதுநோக்கில் உட்கார்ந்து பேசித்தான் பார்ப்போமே என்று அழைத்தால் பேச வர மறுக்கிறீர்கள்.

ஆனால், வெளிநாட்டில் வலிந்து போய் சண்டை களம்
அமைக்கிறீர்கள். ஏன்?

வெளிநாட்டு அரச பிரதிதிநிதிகளை பார்த்து நம்ம விஷயங்களை பேசுவது என்பதே நல்ல விஷயம்தான்.

ரஷ்யாகாரன், கொரியாகாரன், உகண்டாகாரன் அழைத்தால் கூட போய் பாருங்கள். நல்லதே..!

அதேவளை, இந்த வெளிநாட்டு அரசாங்க மட்ட பேச்சுகள் ஒருபுறமும், உள்நாட்டு தமிழ் கட்சிகள் மத்தியில் பேச்சுகள் மறுபுறமும் வெவ்வேறு களங்களில் நடக்கட்டுமே.

ஆனால், வெளிநாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர் வாழும் சர்ச்சைக்குரிய சூழலில், நம்மவர்களை open forum ஒன்றில் இப்படி பார்ப்பது என்பது புத்திசாலித்தனமானதல்ல.

புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பல இயக்கத்தினரும், கட்சியினரும், கொள்கையாளரும், ஜனநாயக கேள்வி-பதில் பரிச்சயம் இல்லாதவரும், குறிப்பாக போரினால் துன்புற்று, போர் முடிவுக்கு வர முன்னரே, நாட்டை விட்டு வெளியேறியோர் இருக்கின்றனர்.

அவர்களது மனவோட்டங்கள் வேறு. காயங்கள் ஆறாதவையாக இருக்கலாம். இன்றைய இலங்கை யதார்த்தம் அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

இவை பற்றிய தெளிவுகள், நண்பர் சுமந்திரனுக்கும், நம்ம தம்பி சாணக்கியனுக்கும் தெரியாமல் போனதும் எனக்கு பெரிய ஆச்சரியமே.

1980 களில் இருந்து, கனடாவில் வாழும் பெருந்தொகை தமிழ் நண்பர்களை எனக்கு தெரியும்.

இந்த தேசிய இனப்பிரச்சினை, இனப்படுகொலைகள், கோர யுத்தம், போர் நிறுத்தம், மீண்டும் படுகோர யுத்தம், மனித உரிமை போராட்டம், ஐநா மனித உரிமை ஆணையரை முதன் முதல் இலங்கைக்கு வரச்செய்தது, தமிழரின் நாட்டை விட்டு வெளியேற்றம், இவற்றை எல்லாம் கடந்து வந்த பழைய ஆளப்பா, நான்!

தமிழ் கனடியர்கள் பெரும்பாலோர், இன்று படித்த நாகரீகமுள்ள பண்பாளர்கள்.

ஏனைய நாட்டு "குடியேற்றவாசி"களுடன் ஒப்பிடுகையில் நம்தமிழர்கள் "ஒப்பீட்டளவில் நல்லொழுக்கம் கொண்டோர்" என எனது ஆங்கில, பிரெஞ்ச் நண்பர்கள், இங்கே இருந்த/இருக்கும் கனடிய ராஜதந்திரிகள் சொல்ல கேட்டிருக்கேன்.

ஆனால், இன்று கொழும்பு சிங்கள, ஆங்கில இனவாத மற்றும் அரசு ஊடகங்கள், சிங்கள சமூக ஊடகங்கள், இந்த சம்பவத்தை பயன்படுத்தி, நம்மை தமிழ் இலங்கையர்களையும், தமிழ் கனடியர்களையும் கழுவி, கழுவி ஊற்றுகிறார்கள்.

சரி, இனியாவது வலிந்து போய் களம் அமைக்காதீர்கள். வேறு என்ன சொல்ல..?

மருத்துவமனை கட்டிலிலிருந்து மனோ கணேசன்

எஸ் தில்லைநாதன்