மயிலன் அப்புத்துரை - புதிய தவிசாளர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளகாரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேச்சைக்குழு (மீன் சின்னம்) உறுப்பினர் மயிலன் அப்புத்துரை இன்று 10 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் தெரிவு செய்யப்பட்டார்.

காரைநகர் பிரதேசசபையின் தவிசாளர் அண்மையில் உயிரிழந்திருந்த நிலையில் புதிய தவிசாளர் தெரிவு இன்று நடைபெற்றது.

இந்நிலையில் 03 உறுப்பினர்களைக் கொண்ட சுயேச்சைக்குழுவில் மயிலன் அப்புத்துரை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 03 பேர், சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் 03 பேர், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் 03 பேர், ஐக்கிய தேசியக்கட்சியினர் 02 பேர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து ஒருவர் என அங்கம் பெறுகின்றனர்.
நேற்றைய தவிசாளர் தெரிவின்போது, ஐக்கிய தேசியக் கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடுநிலைமை வகித்தது,

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சுயேச்சைக்குழு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் சுயேச்சைக்குழு உறுப்பினர் மயிலன் அப்புத்துரை வெற்றி பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

மயிலன் அப்புத்துரை - புதிய தவிசாளர்
மயிலன் அப்புத்துரை - புதிய தவிசாளர்

எஸ் தில்லைநாதன்