மன்னார் மைந்தன் தேர்தலில் வெற்றிவாகை
மன்னார் மைந்தன் தேர்தலில் வெற்றிவாகை

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சுவீஸ் நாட்டில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஒருவர் அதிகபடியான வாக்குகளைப் பெற்று அம் மக்களின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை சுவீஸ் நாட்டில் நடைபெறும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் மன்னார் மாவட்டத்தின் பறப்பாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த சந்தியாப்பிள்ளை கபிரியேல் என்பவர் போட்டியிட்டு இம் மன்ற மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றியீட்டிய இவர் இந்த வருடமும் தேர்தலில் சமூக ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டியபோதும், கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட இம்முறை அதைவிட அதிகபடியான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற இத் தேர்தலில் இவரின் வெற்றிக்கு சுவீஸ் நாட்டு மக்களே அதிகபடியான வாக்குகளை அளித்து வெற்றிவாகை சூட வழி வகுத்துள்ளார்கள் என அங்கிருந்து கிடைக்கும் தகவல் மேலும் தெரிவிக்கின்றன.

இத் தேர்தலில் 40 உறுப்பினர்கள் தெரிவுக்காக ஐந்து கட்சிகளிலிருந்து 72 பேர் போட்டியிட்டதாகவும் இதில் சமூக ஜனநாயக கட்சியைச் சார்ந்த 17 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு.சந்தியாப்பிள்ளை கபிரியேல் சுவீஸ் நாட்டில் ஒரு மொழி பெயர்ப்பாளராகவும், அங்கு மன்னார் மறைமாவட்டத்துக்கு ஒரு பங்கை ஸ்தாபிப்பதற்கு காரண கத்தாவாக இருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மைந்தன் தேர்தலில் வெற்றிவாகை

வாஸ் கூஞ்ஞ

விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்

Home Page - நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை

Apartments - அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments

Resorts - றிசோட்ஸ் வேண்டுமா? Resorts

Villas - விலாஸ் வேண்டுமா? Villas

B & B - B & B வேண்டுமா? B&B

Guest Houses - கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House