
posted 30th November 2021
மன்னார் மாவட்டத்தில் கடந்த 26.11.2021 தொடக்கம் பெய்து வருகின்ற அட மழை காரணமாக அதிகமான மக்கள் வெள்ளத்தின் நிமித்தம் இடம்பெயர்ந்து தங்கள் உற்றார் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்த நிலையில், அவ்வாறு வசதி அருமையான மக்கள் 15 பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இம்மழை வெள்ளத்தால் மன்னார் தீவு மக்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மன்னார் மாவட்ட செயலக அறிக்கையிலிருந்து தெரியவருகின்றது.
30.11.2021 காலை 9 மணி வரையுமான மன்னார் அனர்த்த முகாமைத்துவ அறிக்கையின்படி மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் 12 கிராம அலுவலகப் பிரிவுகளில் 319 குடும்பங்களைச் சார்ந்த 1146 நபர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறிய நிலையில், இவர்கள் 15 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது,
தலைமன்னார் கிராமம் வடக்கில் 3 குடும்பங்களில் 12 நபர்கள் சென் லோறன்ஸ் றோ.க.த.க.பாடசாலையிலும்,
சவுத்பாரில் 6 குடும்பங்களில் 24 நபர்கள் கிறிஸ்து அரசர் ஆலயத்திலும்,
எழுத்தூரில் 15 குடும்பங்களில் 40 நபர்கள் செல்வநகர் சிறுவர் பாடசாலை மண்டபத்திலும்,
எமில்நகரில் 46 குடும்பங்களில் 183 நபர்கள் சென்.மதர் திரேசா றோ.க.த.க.பாடசாலையிலும்,
பேசாலை தெற்கில் 16 குடும்பங்களில் 45 நபர்கள் சென்.மேரிஸ் பாடசாலையிலும்,
பேசாலை மேற்கில் 36 குடும்பங்களில் 123 நபர்கள் முருகன் கோவில் மண்டபத்திலும்,
தலைமன்னார் ஸ்ரேசனில் 38 குடும்பங்களில் 130 நபர்கள் ஸ்ரீதேவி முத்து மாரியம்மன் சிறுவர் பாடசாலையிலும்
துள்ளுக்குடியிருப்பில் 56 குடும்பங்களில் 220 நபர்கள் பிள்ளையார் ஆலயத்திலும்,
ஓலைத்தொடுவாயில் 32 குடும்பங்களில் 118 நபர்கள் பொது மண்டபத்திலும்,
தோட்டவெளியில் 37 குடும்பங்களில் 123 நபர்கள் தோட்டவெளி பாடசாலையிலும் யோசவ் வாஸ் நகர் ஆலயத்திலும்,
பெரியகரிசலில் 3 குடும்பங்களில் 15 நபர்கள் சிறுவர் பாடசாலை மண்டபத்திலும்,
சிறுத்தோப்பில் 31 குடும்பங்களில் 113 நபர்கள் உதயபுரம் சிறுவர் பாடசாலை ஆகிய பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House