மன்னாரில் வியாழக்கிழமை (25.11.2021) 8 நபர்களுக்கு கொவிட் தொற்று

மன்னார் மாவட்டத்தில் இந்த நவம்பர் மாதம் இதுவரை (25.11.2021) 480 கொவிட் 19 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் மன்னார் மாவட்டத்தின் கொவிற் தொடர்பான நாளாந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது 25.11.2021 வியாழக்கிழமை மன்னார் மாவட்டத்தில் 8 கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவற்றில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 5 நபர்களும் அன்டிஜென் பரிசோதனையில் 3 பேருமே அடையாளம் காணப்பட்டவர்களாவார்.

இதில் மன்னார் பொது வைத்தியசாலையில் 5 நபர்களும். முருங்கன். அடம்பன் மற்றும் வங்காலை ஆகிய வைத்திசாலைகளில் தலா ஒருவருமே இத் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் (நவம்பர்) இதுவரைக்கும் 314 பி.சி.ஆர். பரிசோதனையும், அன்டிஜென் 3178 பேருக்கும் மேற்கொண்டதில் 480 நபர்கள் கொவிட் தொற்றாளர்களாக இந்த நவம்பர் மாதம் இனம் காணப்பட்டவர்களாவர்.

இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக மேற்கொள்ளப்பட்ட 29, 707 பி.சி.ஆர். பரிசோதனையிலும் 3178 அன்டிஜென் பரிசோதனையிலும் மொத்தமாக 2873 கொவிட் தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நாளாந்த அறிக்கையில் மேலும் பதிவாகியுள்ளது.

மன்னாரில் வியாழக்கிழமை (25.11.2021) 8 நபர்களுக்கு கொவிட் தொற்று

வாஸ் கூஞ்ஞ