
posted 3rd November 2021
மன்னாரில் கேரளா கஞ்சா தன்வசம் வைத்திருந்ததாக பாடசாலை மாணவன் ஒருவர் மன்னார் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாவது;
செவ்வாய் கிழமை (02.11.2021) மதிய வேளையில் மன்னார் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவுக்கு சிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து மன்னார் மூர் வீதி பகுதியில் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டபோது ஒருவர் கேரளாக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தன் வசம் 4 கிலோ 700 கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்ததாகவே கைது செய்யப்பட்ட நபராவார்.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டள்ளவீரசிங்கவின் பணிப்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ பண்டார மற்றும் மன்னார் மாவட்ட குற்றபுலணாய்வு பிரிவு தற்காலிக பொறுப்பதிகாரி சி.ஐ. மணலகுமார, உதவி பொலிஸ் பரிசோதகர் ராமநாயக உதவி பொலிஸ் பரிசோதகர் வணசிங்க தலைமையில் கொண்ட கோஷ்டினரே இக் கேரளாக் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி கைப்பற்றப்பட்ட கஞ்சா தொடர்பாக சந்தேக நபரான மாணவன் பொலிசாரின் தீவிர விசாரனைக்கு பின் மன்னார் நீதவான் நீதிமன்றில் கஞ்சாவையும் சந்தேக நபரையும் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வாஸ் கூஞ்ஞ