மன்னாரில் மதத் தலைவர்கள் தொண்டர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தேறியது.

வடக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நெறிப்படுத்தலில் மன்னார் மாவட்ட செயலாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் சர்வமத தலைவர்களுக்கும் வழிபாட்டு தலங்களில் கடமையாற்றும் தொண்டர்களுக்குமான இலவச மருத்துவ முகாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி வெள்ளிக்கிழமை (19.11.2021) காலை 8 மணியளவில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றது

குறித்த மருத்துவ முகாமில் மன்னார் நகர் பகுதியில் வசிக்கும் சர்வ மதத் தலைவர் மதத்தலைவர்களும் ஆலயங்களில் பணிபுரியும் தொண்டர்களும் மருத்துவ சேவையினை பெற்றுக் கொண்டார்கள்

இந்த நிகழ்வினை மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சி.டி .அரவிந்ராஜ் போன்றோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை ஆரம்பித்து வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் மதத் தலைவர்கள் தொண்டர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தேறியது.

வாஸ் கூஞ்ஞ

Varisu - வாரிசு - 10.12.2025

Varisu - வாரிசு - 10.12.2025

Read More
Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Varisu - வாரிசு - 08 & 09.12.2025

Read More
எட்டாத அன்பு

எட்டாத அன்பு

Read More