
posted 30th November 2021
மன்னாரில் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டு வருவதனாலும் தற்பொழுது வெள்ள நீர் காணப்படுவதாலும் மன்னார் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் நுளம்பு தங்களை தீண்டா வண்ணம் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ரி.வினோதன் விடுத்திருக்கும் செய்தியில் நவம்பர் மாதம் (11.2021) இதுவரை மன்னாரில் 8 பேர் டெங்கு நோயுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் மேலும் பலர் சமூகத்தில் டெங்கு தொற்றுக்கு உள்ளாகி மென் குணங்குறிகளுடன் குணமடைந்தும் இருக்கலாம் என கருதப்படுகின்றது.
இந்த டெங்கு நோயாளர்களாக காணப்பட்டவர்கள் பேசாலை 8 ஆம் வட்டாரம், பனங்கட்டிக்கொட்டு, எமில்நகர் மற்றும் சின்னக்கடை ஆகிய பகுதிகளிலேயே இந் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர் எனவும், மன்னார் பகுதியில் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் நுளம்பு பெருகும் நிலை காணப்படுவதால் முடிந்தளவு மக்கள் நுளம்பு பெருகும் இடங்களை இல்லாதொழிப்பதுடன் நுளம்புக் கடியிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளைக் கையாளுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் பாடசாலை சமூகத்தினர் பாடசாலை சுற்றாடலை நுளம்பு பெருக்காத வண்ணம் தூய்மையாக வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் எனவும் வேண்டப்பட்டுள்ளனர் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House