மன்னாரில் சனிக்கிழமை (27.11.2021) மேலும் 13 நபர்களுக்கு கொரோனா

மன்னாரில் சனிக்கிழமை (27.11.2021) மேலும் 13 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்தைத் தொடர்ந்து நவம்பர் மாதம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 505 ஆக உயர்ந்துள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளில் கடந்த சனிக்கிழமை (27.11.2021) 13 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில்,

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் 6 பேருக்கும்

பெரிய பண்டிவிரிச்சான் வைத்தியசாலையில் 3 நபர்களுக்கும்

முருங்கன் வைத்தியசாலைகளில் 2 பேருக்கும்

வங்காலை வைத்தியசாலைகளில் 2 பேருக்கும்

இத் தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது.

இதுவரைக்கும் நவம்பர் மாதம் 27 ந் திகதி வரை 505 நபர்கள் கொவிட் 19 தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 2898 பேர் கொரோனா தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் தனது நாளாந்த அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மன்னாரில் சனிக்கிழமை (27.11.2021) மேலும் 13 நபர்களுக்கு கொரோனா

வாஸ் கூஞ்ஞ

விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்

Home Page - நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை

Apartments - அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments

Resorts - றிசோட்ஸ் வேண்டுமா? Resorts

Villas - விலாஸ் வேண்டுமா? Villas

B & B - B & B வேண்டுமா? B&B

Guest Houses - கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House