
posted 24th November 2021
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கடைசியாக வெளியிட்டுள்ள கொரோனா தொடர்பான நாளாந்த அறிக்கையில் மன்னார் மாவட்டத்தில் திங்கள் கிழமை (22.11.2021) மேலும் 26 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பணிப்பாளர் த.வினோதன் கொரோனா தொடர்பான அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;
22.11.2021 திங்கள் கிழமை மன்னார் மாவட்டத்தில் 26 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும்,
இவர்களில்;
மன்னார் பொது வைத்தியசாலையில் 13 நபர்களுக்கும்
மன்னார் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 நபர்களுக்கும்
நானாட்டான் பிரிவில் 02 நபர்களுக்கும்
எருக்கலம்பிட்டி மற்றும் விடத்தல்தீவு வைத்தியசாலைகளில் தலா ஒருவருக்குமே
இத் தொற்று நோயாளர்களாக இந்நாளில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த நவம்பர் மாதம் (11.2021) இது வரைக்கும் 314 பி.சி.ஆர் பரிசோதனையும், 2906 நபர்களுக்கு அன்டிஜென் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதில் இந் நவம்பர் மாதம் 22 ந்திகதி வரை 456 நபர்களுக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
இது வரைக்கும் மன்னார் மாவட்டத்தில் 2849 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியவர்கள் என பதிவாகியுள்ளதாகவும், 25 நபர்கள் கொரோனாவினால் மரணித்துள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னாரில் வழங்கப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசிகளில் முதலாவது தடுப்பூசி 81,011 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 74,740 நபர்களுக்கும், பூஸ்ரர் 660 பேருக்கும். பாடசாலை மாணவர்களுக்கு 5627 நபர்களுக்கும் மற்றும் பாடசாலையை விட்டு இடை விலகல் மாணவர்களுக்கு 1153 பேருக்கும் இத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ