
posted 19th November 2021
மன்னார் மாவட்டத்தில் 18 ந் திகதி (18.11.2021) 07 பேருக்கு மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தனது நாளாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் மன்னாரில் நவம்பர் மாதம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் மன்னார் மாவட்டத்தின் கொரோனா தொடர்பான நாளாந்தம் வெளியிடும் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
18.11.2021 அன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் மன்னாரில் 07 கொவிட் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில்;
அடம்பன் வைத்தியசாலையில் 03 நபர்களும்
தலைமன்னாரில் 02 பேரும்
மன்னார் பொது வைத்தியசாலை 01
பேசாலை வைத்தியசாலையில் 01
தொற்றாளர்களாக இனம் காணப்பட்டவர்களாவார்.
இந்த நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை 274 லிலும், அன்டிஜென் பரிசோதனை 2476 லிலும் 385 நபர்கள் கொவிட் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரைக்கும் மன்னாரில் கொவிட் முதலாவது தடுப்பூசி 81,006, இரண்டாவது தடுப்பூசி 74,683, பூஸ்ரர் தடுப்பூசி 607, பாடசாலை மாணவர்களுக்கு 5605 மற்றும் பாடசாலை இடைவிலகல் குறிப்பிட்ட வயதுடையோருக்கு 1144 பேருக்கும் கொவிட் தொற்று தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ