மகிழ்ச்சிப் பெருவிழா!

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் பெரு முயற்சியில் பொத்துவில் ஆதார வைத்தியசாலை டைப் பீ தரத்திலிருந்து டைப் ஏ தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வைத்தியசாலை தரமுயர்வினை கொண்டாடும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மகிழ்ச்சிப் பெருவிழா நேற்று வியாழக்கிழமை (11) வைத்தியசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கெளரவ அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் கௌரவ அதிதியாகவும், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.அப்துல் றஹீம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் யூசுப் நியாஸ், பிரதேச சபை உறுப்பினர்கள் முனாஸ், சதக்கத்துல்லா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

இந்த மகிழ்சிப் பெருவிழாவில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர், பிரதேச சபை உறுப்பினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த வைத்தியசாலையினை தரமுயர்த்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப், அதற்கான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கியமைக்கு வைத்தியசாலை வட்டாரம் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது.

மகிழ்ச்சிப் பெருவிழா!

ஏ.எல்.எம்.சலீம்