பௌர்ணமி தினத்தின் 216ஆவது 'அமாதம் சிசிலச' நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைய அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் 'அமாதம் சிசிலச' தர்ம உபதேசத் தொடரின் 216ஆவது தர்ம உபதேசம் இன்று (18) அலரி மாளிகையில் நடைபெற்றது.

பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் புத்தபெருமானுக்கு மலர் பூஜை நிகழ்த்தியதை தொடர்ந்துஇ தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்காக வருகைத்தந்த வாத்துவ தல்பிடிய போதிராஜ மஹா விகாராதிபதி பேராசிரியர் வணக்கத்திற்குரிய கொடபிடியே ராஹுல தேரரை வரவேற்றார்.

பௌத்த மதத்தினூடாக கிடைக்கும் மன அமைதியை உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெறச் செய்யும் உன்னத நோக்கத்தில் சகல பௌர்ணமி தினத்திலும் 'அமாதம் சிசிலச' தர்ம உபதேச நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.

'இவ்வுலகத்தில் உள்ள சகல விடயங்களையும் கற்றுத் தேர்வதன் புலமைப் பெற முடியும் என சிலர் எண்ணுகின்றனர். ஆனால் அவ்வாறு இல்லை. புலமைப் பெறுதல் என்பது தமக்கு தேவையானஇ தமது வாழ்க்கைக்கு உரிய மற்றும் தமது துறைக்கு உரியவற்;றை அறிந்திருப்பதாகும். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கும் தமது துறையில் சிறந்த புலமை இருத்தல் வேண்டும். இது ஒரே தடவையில் ஏற்படாது. இத்தேர்ச்சி படிப்படியாகவே ஏற்படும்.

அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக பணியாற்றிஇ இந்த அரசியல் உலகிற்குள் நுழைந்துஇ அரசியல் சார்ந்த புத்தகங்களைப் படித்துஇ அரசியல்வாதிகளின் நடத்தைகளைப் கற்றுஇ அவர்களைப் பற்றி புரிந்துகொண்டுஇ முன் வந்துஇ தங்களைத் தாங்களே அரசியல் செய்யஇ படிப்படியாகஇ அரசியல் இப்படித்தான் செயல்படுகிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு பணியாற்ற முடியுமாயின் அதுவே அரசியல் புலமையாகும்.

நீங்கள் இப்போது அரசியலில் தேர்ச்சி பெற்றிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு அரசியல்வாதியின் நடத்தை மற்றும் ஒரு வார்த்தையின் மூலம் அவர் கூற வருவது இவ்விடயம் தான் என்பதை உங்களால் புரிந்துக் கொள்ள முடியும். அது அரசியலின் நீண்ட கால பயணத்தின் மூலமே கிடைக்கும் என வணக்கத்திற்குரிய கொடபிடியே ராஹுல தேரர் குறிப்பிட்டார்.

கௌரவ பிரதமர் அவர்களேஇ இன்று உங்கள் பிறந்த தினம். உங்கள் பிறந்தநாள் உங்களுக்கும்இ உங்கள் பெற்றோர்இ உங்களுக்கு கற்றுத் தந்த ஆசிரியர்கள்இ உறவினர்கள்இ நண்பர்கள்இ இந்நாட்டு மக்களின் நலனுக்கானது என்று நம்புகிறேன்.

நீங்கள் இந்நாட்டில் இருந்த தலைவர்களில் சிரேஷ்ட தலைவர். உங்களது அரசியல் கட்டமைப்பை கொண்டு நான் அவ்வாறு கூறவில்லை. நீங்கள் மிகுந்த அதிஷ்டம் மிக்கவர். அது எவரும் அறிந்த மற்றும் எவரும் ஏற்றுக் கொள்ளும் உண்மையாகும்.

அரசியலில் அதனை எந்த விதத்தில் அர்த்தப்படுத்தினாலும் பரவாயில்லை. பிக்கு என்ற முறையில் நாம் அதனை உண்மையாக கூற வேண்டும். அதனால் உங்களது பிறந்த தினம் உங்களுக்கும்இ நாட்டிற்கும்இ உலகிற்கும் பயனுள்ளதாக அமைந்தது.

எனவே அப்பிறப்பு மிகுந்த மதிப்பு வாய்ந்தது. இந்நாட்டிற்கும்இ சமூகத்திற்கும்இ இவ்வுலகிற்கும் இன்னும் நீண்ட காலம் சேவையாற்றுவதற்கு உங்களுக்கு பலமும் தைரியமும் கிட்ட வேண்டும் என வணக்கத்திற்குரிய தேரர் ஆசீர்வாதம் செய்தார்.

இதன்போது மொரட்டுவ சத்கரடு நதினி ஹேவாரத்ன அவர்களினால் முத்துக்களினால் அலங்கரிக்கப்பட்ட ஆறு அடி உயரமான பேழையொன்று கௌரவ பிரதமருக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அப்பேழையானது கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் யாழ்ப்பாணம் நாகதீப விகாரைக்கு தானம் செய்யப்பட்டது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நடைபெற்ற 'அமாதம் சிசிலச' தர்ம உபதேச நிகழ்வில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்இ பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷஇ பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.

பௌர்ணமி தினத்தின் 216ஆவது 'அமாதம் சிசிலச' நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

வாஸ் கூஞ்ஞ