பொலிஸ் பொதுமக்கள் உறவு வேறுபடுத்த முடியாதது

பொலிஸ் பொதுமக்கள் நல்லுறவு எப்போதும் மிக முக்கியமானதாகும். பொலிஸாரினதும் பொது மக்களினதும் உறவை, தொடர்பை வேறுபடுத்த முடியாது இன்றைய கால கட்டத்தில் பொலிஸ் சேவை பொது மக்களுக்கு அவசியமாகின்றது.

இவ்வாறு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பேராசிரியர், சட்டத்தரணி எல்.கே.எபிள்யூ.கமல் சில்வா கூறினார்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தவூரில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை சம்பிரதாய பூர்வமாக இன்று திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத்தின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்த பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டி.ஜெயந்த ரெத்தினாயக்க, அம்பாறை பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.வை.செனவிரத்தின, கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.எச்.டி.எம்.எல்.புத்திக ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லதீப், நிந்தவூர் ஜும்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் எஸ்.எம்.பி.பாறூக், நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ஸஹீலா றாணி இஸ்ஸடீன், உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.றசீன் உட்பட பிரமுகர்கள் பலரும் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பேராசிரியர் கமல் சில்வா தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

நீண்டகாலமாக நிந்தவூர் பிரதேசத்திற்கு பொலிஸ் நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது இக்கோரிக்கை இன்றுடன் நிறைவுபெறுகின்றது.

பொலிஸ் திணைக்கத்தினைப் பொறுத்தவரை அந்தந்த பிரதேச மக்களுக்கு அவர்கள் வாழும் பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்களை அமைத்து சேவையாற்றுவதே முக்கிய நோக்காகக் கொண்டுள்ளது.

பொது மக்களின் நலன் கருதி குறிப்பாக பாதுகாப்பு சிவில் நிர்வாகத்திற்கும் பொலிஸ் நிலைய சேவைகள் முக்கியமானதாகும். மக்கள் எதிர்பார்ப்பதும் இதுவே ஆகும். இது மக்களின் பொலிஸ் நிலையமாகும். இந்த பொலிஸ் நிலையம் மூலம் பொது மக்களுக்கு நல்ல சேவைள் வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். பொது மக்கள் இப்பொலிஸ் நிலையத்தின் செயற்பாட்டிற்கு சட்டரீதியான ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

பிரதேச பாதுகாப்பு, சட்ட விரோத செயல்களை ஒழித்தல் என்பவற்றை விசேட கவனத்திற்கொள்ளும் இப்பொலிஸ் நிலையத்திற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டுமென கோருவதுடன், இப் பொலிஸ் நிலையம் சிறப்பாக இயங்குவதற்கான ஆதரவும் மக்களிடமிருந்து கோருகின்றோம்” என்றார்.

நிந்தவூர் புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டீ.எம்.எஸ்.கே.தஸநாயக்க நன்றியுரை பகர்ந்தார்.

பொலிஸ் பொதுமக்கள் உறவு வேறுபடுத்த முடியாதது

எ.எல்.எம்.சலீம்

To find a suitable and affordable prices to enjoy your holidays CLICK HERE now* *Holiday Bookings