பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு  மின்பிறப்பாகி கையளிப்பு.

பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு உலக வங்கியின் நிதியுதவி திட்டத்தின் கீழ் 60 கே.டபிள்யூ வலுவுடைய மின்பிறப்பாகி மன்னார் பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.வினோதன் பேசாலை வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி இம்மனுவேல் ஈற்றன் பீரிஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அடிக்கடி ஏற்பட்டுவரும் மின்சார தடையினால் பலர் பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் வைத்தியசாலைகளும் இவ்வாறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் மேற்கொண்ட நடவடிக்கையால் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு சிறிய வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் உலக வங்கியின் நிதியுதவி திட்டத்தின் கீழ் 60 கே.டபிள்யூ வலுவுடைய மின்பிறப்பாகி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு இவ் வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி இ.ஈற்றன் பீரிஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பேசாலை மற்றும் சிலாவத்துறை வைத்தியசாலைகளை தளவைத்தியசாலைகளாக எதிர்காலத்தில் தரமுயர்த்தும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த வலுக்கூடிய மின் பிறப்பிப்பாக்கி மாற்று மின் வலு தேவைப்படும் நேரத்தில் உபயோகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு  மின்பிறப்பாகி கையளிப்பு.

வாஸ் கூஞ்ஞ