பெயர் தெரியாத தாவரம் கரை ஒதுக்கம்

பருத்தித்துறை கடற்பரப்பில் இனந்தெரியாத தாவர இனம் ஒன்று பெருமளவாக நேற்று திங்கட்கிழமை (08) காலை கரையொதுங்கி காணப்படுகின்றன.

தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் இந்திய கரையோரப் பகுதிகளிலிருந்து இத் தாவரங்கள் அடித்து வரப்பட்டு இங்கு கரை ஒதுங்கி இருக்கலாம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

பருத்தித்துறை துறைமுகம் தொடக்கம் கிழக்கு பகுதியான சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு இத் தாவரங்கள் கரையொதுங்கிக் காணப்படுகின்றன.

பல லட்சக்கணக்கில் காணப்படும் தாவரங்களினால் மீனவர்கள் தமது வலைகளை கடலுக்கு கொண்டு செல்வதற்கு தடையாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

பெயர் தெரியாத தாவரம் கரை ஒதுக்கம்
பெயர் தெரியாத தாவரம் கரை ஒதுக்கம்

எஸ் தில்லைநாதன்