
posted 8th November 2021
உடுப்பிட்டி இமையாணன் மேற்கு துவாலி வீதியில் உள்ள வீடு ஒன்றில் பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் பவித்திரன் (வயது-16) என்பவராவார்.
நேற்று திங்கட்கிழமை(08) அதிகாலை இவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உறவினர்களால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எஸ் தில்லைநாதன்