
posted 10th November 2021
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து அவர் தன்னை சுய தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன்