
posted 25th November 2021
யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் தெற்கு - மண்டான் வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இளம்பெண் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று வியாழக்கிழமை(25) முற்பகல் 11.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த எஸ்.சிவகலா (வயது -30) என்பவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் உடனடியாக அம்புலன்ஸ் வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

எஸ் தில்லைநாதன்