
posted 26th November 2021
பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் உட்பட 17 பேர் தனிமைப்படுத்தலில்.....!
நேற்று முன் தினம் இடம் பெற்ற பருத்தித்துறை நகரசபையின் 2022 ம் ஆண்டுக்கான பாதீட்டு அமர்வில் கலந்து கொண்ட பருத்தித்துறை நகர சபை தவிசாளர், உறுப்பினர்கள், மற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் உள்ளடங்கலாக 17 பேர் நேற்றிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
நேற்றைய தினம் பருத்தித்துறை நகரசபையின் 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு இடம் பெற்ற வேளை அங்கு கலந்து கொண்டிருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோணா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவ் அமர்வில் கலந்து கொண்ட 14 உறுப்பினர்களுடன் ஒரு தொழின்நுட்ப உத்தியோகத்தர், மற்றும் ஒரு எழுதுனர் ஆகியோர் நேற்றைய தினத்திலிருந்து தனிமைல்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த தனிமைபடுத்தலை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேற்கொண்டிருந்தமை குறிப்பிட தக்கது.

எஸ் தில்லைநாதன்