பனையிலிருந்து தவறி வீழ்ந்தவர் உயிரிழந்தார்

பனையிலிருந்து தவறிவீழ்ந்து சீவல் தொழிலாளி உயிரிழந்தார்.

வடமராட்சி - உடுப்பிட்டி - இமையாணன் கிழக்கு ந. ஜெயராசா (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) மாலை சீவல் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பனையிலிருந்து தவறி வீழ்ந்தார் எனக் கூறப்படுகின்றது.

வீழ்ந்தவரை பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்து விட்டார் என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் வைக்கப்பட்ட அவரின் சடலம் வைக்கப்பட்டிருந்த நிலையில் மரண விசாரணைகள் நேற்று (22) இடம்பெற்றது. பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி ச. சிவராசா விசாரணைகளை மேற்கொண்டதுடன் உடல்கூற்று பரிசோதனைக்கும் உத்தரவிட்டார்.

பனையிலிருந்து தவறி வீழ்ந்தவர் உயிரிழந்தார்

எஸ்.தில்லைநாதன்