பனிமூட்டம்

கிழக்கிலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை சீரடைந்து வருவதுடன், தற்பொழுது பனிமூட்டத்துடன் கூடிய கால நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது

குறிப்பாக பகல் வேளைகளில் அதிக உஷ்ணத்துடன் கூடிய வெயில் இறைத்து வரும் அதேவேளை காலையில் கடும் குளிருடன், பெரும் பனிப்பொழிவும் ஏற்பட்டு வருகின்றது.

விஷேடமாக அம்பாறை மாவட்டத்தில் அதிகாலை தொடங்கி அதிக நேரம் (காலை 9 மணி வரை) பிரதேச மெங்கும் பனி மூட்டம், பனிப்பொழிவு காணப்படுகின்றது.

இதனால் காலை வேகைளில் வீதிகளில் வாகனங்களில் பயணிப்போர் தமது வாகனங்களின் விளக்குகளை ஒளிரச் செய்தவாறே பயணிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

நுவரெலிய, பண்டாரவளை போன்ற மலையக குளிர்ப்பிரதேசங்களில் காணப்படுவது போன்ற நிலையிலேயே தற்போதய கிழக்கின் காலை வேளையிலான சூழ்நிலை காணப்படுகின்றது.

புகை மண்டலம் போன்றே இந்த பனி மூட்டம் சூழலும் தென்படுவது குறிப்பிடத்கதக்கது.

பனிமூட்டம்