
posted 9th November 2021
செயலாளர் அறிவிப்பு!
இலங்கையில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அதிக மழைவீழ்ச்சி பதிவாவதால் வடக்கு மாகாணத்துக்குட்பட்ட பாடசாலைகள் தொடர்பாக அந்தந்த மாவட்டச்செயலாளர்கள் தீர்மானங்களை மேற்கொள்வர். அதற்கேற்ப யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு மாவட்டச் செயலாளரின் தீர்மானத்துக்கு அமைய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் எமது ழுழுமத்துக்கு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்துக்கு பொறுப்பாக மாவட்டச் செயலாளரே இருப்பதால் அவரே இது தொடர்பான விடயங்களை மேற்கொள்வார் எனவும், இன்றைய பாடசாலை நாளுக்குப் பதிலாக மீண்டும் பதில் பாடசாலை நடைபெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன்